புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் பார்த்த மாணவர்கள்

ராணிப்பேட்டையில் புகைப்பட கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

Update: 2023-01-19 17:53 GMT

ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'ஓயா உழைப்பின் ஓராண்டு என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கடந்த 14-ந் தேதி தொடங்கி வைத்தார். வருகிற 23-ந் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

இக்கண்காட்சியில் அரசின் சாதனைகள் மற்றும் முதல்-அமைச்சர் பல்வேறு துறைகளில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பல்வேறு துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் மற்றும் தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியை தினமும் ஏராளமான மாணவ -மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை சிலம்பம், கிராமியக் கலைகள், பரதநாட்டியம், யோகா, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்