சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி ஒற்றுமை ஓட்டம்
மயிலாடுதுறையில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி ஒற்றுமை ஓட்டம் நடந்தது.
மயிலாடுதுறை;
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான நேற்று தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்க மைதானத்திலிருந்து ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. ஒற்றுமை ஓட்டத்தை மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், சாய் விளையாட்டு அரங்க பொறுப்பாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஒற்றுமை ஓட்டம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி மகாதானத் தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.