இந்திய மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் இந்திய மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-27 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய கல்வி கொள்கையை மறுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மாநிலக்கல்வி கொள்கையை விரைந்து அறிவிக்க வேண்டும், காலியாக உள்ள மத்திய, மாநில அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி வட்ட செயலாளர் செண்பகவள்ளி கண்டன உரையாற்றினார்.

இதில் மாணவர் கழகம், இளைஞர் கழகத்தை சேர்ந்த ஸ்டாலினா, சினேகா, தொல்காப்பியன், அருள்குமார், ராஜேஷ், தேவா, பிரசன்னா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்