அரசு கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பேராசிரியரை கைது செய்யக்கோரி பல்லடம் அரசு கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போரட்டம்

Update: 2023-08-22 11:20 GMT

பல்லடம், 

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பேராசிரியரை கைது செய்யக்கோரி பல்லடம் அரசு கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போரட்டம் நடத்தினர்.

அரசுக்கல்லூரி

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் பாலமுருகன் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி ஆன்லைன் மூலமாக திருப்பூர் ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் அகிலன் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பேராசிரியர் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்வதை அறிந்த பாலமுருகன் தலைமறைவானார். இதையடுத்து அவரை பிடிக்க பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பேராசிரியர் பாலமுருகன் இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்க அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியின் நுழைவாயிலில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது பேராசிரியர் பாலமுருகனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இது பற்றி தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் அவர்களிடம் பேச்சு வார்தைநடத்தினர். பேராசிரியர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்ததையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

-

Tags:    

மேலும் செய்திகள்