கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி கொடியேற்றி வைப்பார். அன்று மைதானத்தில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சிலம்பம் மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தி ஒத்திகை பார்த்தனர். இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.