பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் மறியல்

குடியாத்தம் அருகே பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-25 18:15 GMT

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி, கணவாய் மோட்டூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பஸ் போக்குவரத்தை நம்பி உள்ளனர்.

காலை வேளையில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களில் அந்த வழியாக செல்லும் டவுன் பஸ் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக தெரிகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் அரசு டவுன் பஸ் நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், கிராம மக்கள் கல்லப்பாடி பஸ் நிறுத்தம் அருகே அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, வெங்கடேசன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்