கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்

கன்னிராஜபுரம் கல்வியியல் கல்லூரியில் கயிறு இழுக்கும் போட்டியில் மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2023-01-13 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண்அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு கல்வியியல் கல்லூரி தாளாளர் சந்திரசேகர பாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் தாமோதரன், கல்லூரி நிர்வாகிகள் மனுவேல், சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயிறு இழுக்கும் போட்டி, உறியடிக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கல்வியியல் கல்லூரி தாளாளர் சந்திரசேகர பாண்டியன் வழங்கினார். முடிவில் மாணவச் செயலாளர் கோபிகா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்