பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை

பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-06-25 18:01 GMT

வேலூர் மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வில்வித்தை வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் கீழ் இயங்கும் பெரம்பலூர் எவரெஸ்ட் வில்வித்தை பயிற்சி மையத்தின் மாணவர்களான அன்புசெல்வன் 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடமும், அதியரசன், ஹரிதர்ஷன் ஆகியோர் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடமும், அபினவ் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர். பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் முதலிடம் பிடித்த அன்புசெல்வன், அதியரசன், ஹரிதர்ஷன் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், 2-ம் இடம் பிடித்த அபினவுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மாநில அளவிலான வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களான அன்புசெல்வன், அதியரசன், ஹரிதர்ஷன், அபினவ் ஆகிய மாணவர்களை தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் ரத்தினசபாபதி, பெரம்பலூர் மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளரும், பெரம்பலூர் எவரெஸ்ட் வில்வித்தை பயிற்சி மையத்தின் நிறுவனருமான சங்கர், சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ராஜா சிதம்பரம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்