கவர்னரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாணவர்கள்...!!!
மதுரை மாணவர்கள் கவர்னரிடம் வாழ்த்து பெற்றனர்
மதுரை நகரி பகுதியில் உள்ள கல்வி இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கை பயணத்தை சாதனைகளைப் பழக்கப்படுத்துகிறது.
இந்த சிறந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எம்.அனிஷா பாத்திமா (9-ம் வகுப்பு), இளைய ஜூம்பா நடன பயிற்சியாளராகவும், எம்.முகமது ஜாபர் (6-ம் வகுப்பு) இளைய மேஜிக் கலைஞராகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
திறமையான இளம் குழந்தைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்களின் திறமையை கவர்னர் பாராட்டி வாழ்த்தினார்.