அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்மாணவர்களின் தேசிய கருத்தரங்கு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல கட்டிடவியல் துறையில் மாணவர்களின் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு புல முதல்வர் முருகப்பன் தலைமை தாங்கினார். கட்டிடவியல் துறை தலைவர் பூங்கோதை வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் பேராசிரியருமான ஆனந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு பேசினார். முன்னதாக பேராசிரியர் குமரவேல் அறிமுகம் செய்து வைத்து பேசினார். கட்டிடவியல் துறை கூட்டமைப்பின் மாணவர் சங்க தலைவர் இந்துஸ்ரீ ஆண்டறிக்கையை வாசித்தார். கருத்தரங்கில் இந்திய அளவில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதித்தனர். முன்னதாக மாணவர் ஒருங்கிணைப்பாளர் விக்ரம் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் பேராசிரியர்கள் நேருக்குமார், பழனிவேல்ராஜா, ரமேஷ், பழனி, இணை பேராசிரியர் பாலகுமார், இணைத்தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடந்த இந்த கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இணை பேராசிரியர் ஞானகுமார் நன்றி கூறினார்.