பல வண்ணப்பொடிகளால் இந்திய வரைபடம் உருவாக்கிய மாணவர்கள்
பல வண்ணப்பொடிகளால் இந்திய வரைபடத்தை மாணவர்கள் உருவாக்கினார்கள்.
திருப்பரங்குன்றம்
திருநகர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உலக சாதனை முயற்சியாக இந்தியாவில் பிளாஸ்டிக் மறுசுழற்சி என்ற தலைப்பில் இந்திய வரைபடம் உருவாக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்று, பூங்காவின் மைய பகுதியின் தரையில் பல்வேறு வண்ணங்களில் பொடியைப் பயன்படுத்தி இந்திய வரைபடத்தை உருவாக்கி, அதில் பிளாஸ்டிக்கை குறைத்து மறுசுழற்சி செய் என்று கையால் எழுதப்பட்ட வாசகத்தை ஒட்டினார்கள். இந்திய வரைபடம் செய்து முடிக்க 100 நிமிடங்கள் 100 நொடிகள் ஆனது.
இதற்கான ஏற்பாடுகளைஅகிலா, மீனாட்சி, சுந்தரி, சுரேந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.