விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்

விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-29 21:48 GMT

வத்திராயிருப்பு, 

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வத்திராயிருப்பு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வழிகாட்டுதலின் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியில் வத்திராயிருப்பு பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நெல் நடவு வயலில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது உருளை விதைப்பு கருவி மூலம் பாரம்பரிய ரகமான சீரகச்சம்பா விதைப்பு செய்யப்பட்டது. மேலும் இவற்றின் முக்கியத்துவம் பற்றியும், சாகுபடி தொழில்நுட்பம் பற்றியும் செயல் விளக்கம் மூலம் வேளாண்மைத்துறை அலுவலர் சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார். அதன்பின் இயற்கை உயிர் உரத்தை பயன்படுத்துவதன் அவசியத்தை செயல் விளக்கம் செய்தும் காண்பித்தனர். பின்பு வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்கள் முகமது ஆசிப் கான், தயாநிதி, பிரவின்குமார், தாசபிரகாஷ், சயூஜ், விஸ்வநாத அபிஷேக், அதுல் பிரசாத், சித்தார்த், துர்கேஸ்வரன் ஆகியோர் விவசாயத்தில் தற்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக முன்னோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.


Tags:    

மேலும் செய்திகள்