மாணவர்கள் பதவி ஏற்பு விழா

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது

Update: 2022-07-09 21:14 GMT

அம்பை:

தென்காசி வேல்ஸ் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் மாணவர்கள், தேர்தல் மூலமாக மாணவர் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கான பதவி ஏற்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் வீரவேல் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சாந்தி வரவேற்று பேசினார்.

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ெதாடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் இப்பள்ளியில் புற்றுநோய்க்காக நிதி திரட்டும் மாணவர்கள் குழுவின் சார்பில், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தென்காசி கேன்சர் மைய இயக்குனர் டாக்டர் அருணா சந்திரசேகரிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்