தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள்24 மணி நேரம் பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து சாதனை

தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் 24 மணி நேரம் பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து சாதனை நிகழ்த்தினர்.

Update: 2023-05-11 18:45 GMT

தூத்துக்குடியில் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் நோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24 மணி நேரம் தொடர்ந்து பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை முயற்சி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடியை சேர்ந்த 5 வயது முதல் 14 வயது வரை உள்ள 21 ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர். இந்த சாதனையை வெற்றிகரமாக முடித்த மாணவ, மாணவிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பயிற்சியாளர் ஜோசப் ராஜ் மற்றும் மாணவ, மாணவிகள்.

Tags:    

மேலும் செய்திகள்