நாடு வளர்ச்சி அடைவதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது
நாடு வளர்ச்சி அடைவதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
சிக்கல்:
நாடு வளர்ச்சி அடைவதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
விலையில்லா சைக்கிள்
நாகை மாவட்டம், கீழ்வேளுர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகை மாலி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு் 845 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாணவ, மாணவிகள் போதைப்பொருட்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக இருக்க வேண்டும், மாணவர்கள் செல் போன்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மாணவர்களின் பங்கு முக்கியம்
இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் மாணவர்களின் குடும்பத்தை பாதிக்கும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
படித்தால்தான் பெரிய வேலைகளில் அமர முடியும். நாடு வளர்ச்சி அடைவதில் முழு பங்கு மாணவ, மாணவிகளிடம் தான் உள்ளது.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
மாணவர்கள் சிறு வயதில் இருந்தே நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம் ஆகிய அனைத்திலும் சிறப்பாக இருந்து நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் சங்கர், கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி, செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் இலக்கியலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.