புத்துணர்வு பயிற்சியால் மாணவர்கள் உற்சாகம்

கோவையில் பள்ளிகளில் நடத்தப்படும் புத்துணர்வு பயிற்சியால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Update: 2022-06-15 15:37 GMT

கோவையில் பள்ளிகளில் நடத்தப்படும் புத்துணர்வு பயிற்சியால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புத்துணர்வு பயிற்சி

பள்ளிகள் திறந்ததும் ஒருவாரம் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறியிருந்தது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலுமே புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கொரோனாவை எதிர்கொள்வது, பாதுகாப்பாக இருப்பது போன்றவை குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.

கதைகள் கூறுவது

இதுகுறித்து கோவை ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தீபா கூறியதாவது:-

எங்கள் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் உளவியல் ரீதியான மற்றும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

வழக்கமான பாட வேளைகள்படியே, ஒவ்வொரு பாட வேளையாக பிரித்து, ஒவ்வொரு மாதிரியான புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த புத்துணர்வு பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு படம் வரைந்து வண்ணம் தீட்டுதல், நன்னெறி மற்றும் நீதிக்கதைகள் கூறுதல், தனி நடிப்பு, விளையாட்டு, பாடல் பாடுவது என சொல்லி கொடுக்கப்படுகிறது.

நல்லொழுக்கம்

ஆசிரியர்களாகிய நாங்களும் எங்களுக்கு தெரிந்த கதைகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறுகிறோம். அதேபோன்று மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த அல்லது தங்கள் முன்னோர்கள் கூறிய நன்னெறி கதைகளை தாங்களாக முன்வந்து சொல்கின்றனர்.

இதுதவிர மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும். பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நல்ெலாழுக்கம் குறித்தும் எடுத்து கூறி வருகிறோம்.

புத்தகங்கள் வாசிப்பு

மாணவர்களும் இந்த வகுப்புகளில் ஆர்வத்துடன் பங்கேற்று கதைகள் கூறுவது, படங்கள் வரை வது, பாடல்கள் பாடுவது என தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

இதுதவிர மதிய வேளைகளில் மாணவர்களுக்கு செய்தித்தாள், புத்தகங்கள் வாசிக்கவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த புத்துணர்வு பயிற்சியானது ஒரு வார காலத்திற்கு நடைபெறும். அதன்பிறகு வழக்கமான பாடங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்