பிரமாண்ட செஸ் போர்டில் விளையாடி மகிழ்ந்த மாணவர்கள்

பிரமாண்ட செஸ் போர்டில் விளையாடி மகிழ்ந்த மாணவர்கள்

Update: 2022-07-31 18:46 GMT

கீரமங்கலம்:

உலக செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு துறை சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல பள்ளி மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களை செஸ் ஒலிம்பியாட் பார்க்க அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக பெரிய போர்டு பதாகை விரித்து பிரமாண்டமான செஸ் காய்களையும் வைத்துள்ளனர். இந்த பிரமாண்ட காய்களை அந்த வழியாக செல்வோர் பார்த்துச் செல்லும் நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிகள் விடுமுறை என்பதால் கீரமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செஸ் போர்டில் விளையாடி மகிழ்ந்தனர். மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள மரத்தடியில் வைத்து விளையாடினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்