மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திங்கட்கிழமை செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நேற்று செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவரும், செயலாளருமான ஆர். ஏ. அய்யனார் தலைமை தாங்கினார்.
பேரணியை கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி சின்ன ராசு தொடங்கி வைத்தார். செஸ் போட்டி பற்றி பள்ளி துணை ஆய்வாளர் சசிகுமார், உடற்கல்வி ஆசிரியர் ஜெயஜோதி ஆகியோர் பேசினா். பேரணி ஜோதி நகர், புது ரோடு, மெயின் ரோடு, பழனியாண்டவர் கோவில் தெரு வழியாக பள்ளி வளாகத்தை அடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் செய்திருந்தார். பேரணி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் மாரி முருகேசன், கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.
----------