ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

அம்மனூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-17 18:12 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் உடனே போதுமான ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று திடீரென அரக்கோணம் - ஓச்சேரி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், கிராம நிர்வாக அலுவலர் முகமது இலியாஸ் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்