மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

Update: 2022-12-14 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பார்வதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியை மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியானது ராஜலட்சுமி நகர், பெருவிளை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், குப்பை இல்லா குமரியை உருவாக்குவோம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். நிகழ்ச்சியில் மாநகர் நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, மண்டல தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல மக்கும் குப்பைகளையும், மக்கா குப்பைகளையும் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமை தாங்கினார். தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலந்துகொண்டு குப்பைகளை எவ்வாறு தரம்பிரித்து வழங்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்