நெகமம்
நெகமம் பேரூராட்சி சார்பில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையொட்டி ஒருங்கிணைந்த வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்தல் பற்றி விளக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடைபெற்றது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து நடந்த விழிப்புணர்வு முகாமில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.