பஸ்களை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டம்

பஸ்களை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-02 18:45 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வழியாக எசனூர் வரை அரச பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மற்றும் தனியார் பஸ்கள் மூலம் எசனூர், மதகளிர்மாணிக்கம், குணமங்கலம், எம்.பி.அக்ரஹாரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு தினமும் வந்து செல்கிறார்கள். ஜெயங்கொண்டத்தில் இருந்து எசனூர் செல்வதற்காக நேற்று மாலை ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்துக்கு அரசு பஸ் வந்தது. அப்போது பயணிகள் பஸ்சில் அதிகமாக ஏறியதால், எசனூர் பகுதி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய முயன்றனர். இதைப்பார்த்த பஸ் டிரைவர், மாணவர்களிடம் படிக்கட்டுகளில் தொங்கினால் பஸ்சை ஜெயங்கொண்டம் நோக்கி திருப்பிச் எடுத்துச் சென்று விடுவேன் என்று கூறி பஸ்சை இயக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அரசு பஸ்சை எசனூருக்கு இயக்க கோரி, அந்த பஸ் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்து, பஸ்சை எசனூர் நோக்கி இயக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்