ரிதன் பிரின்ஸி விக்டரி அகாடமி மாணவ- மாணவிகள் 271 பதக்கங்கள் வென்று சாதனை

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 271 பதக்கங்களை பெற்று ரிதன் பிரின்ஸி விக்டரி அகாடமி மாணவ- மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

Update: 2022-12-17 20:00 GMT

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 271 பதக்கங்களை பெற்று ரிதன் பிரின்ஸி விக்டரி அகாடமி மாணவ- மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

மாநில சிலம்ப போட்டி

தமிழ்நாடு சிலம்ப கமிட்டி சார்பில் கோவையில் கடந்த 10, 11-ந் தேதிகளில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சையில் உள்ள ரிதன் பிரின்ஸி விக்டரி அகாடமி சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ- மாணவிகள் 143 பேர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் நெடுங்கம்பு வீச்சு, சித்திரை சிலம்பம், இரட்டை கம்பு வீச்சு தொடும் முறை, ஒற்றை சுருள்வாள், இரட்டை சுருள்வாள், ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு வேல் கம்பு வீச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

271 பதக்கங்கள்

112 தங்கம், 86 வெள்ளி, 73 வெண்கலம் வென்று மொத்தம் 271 பதக்கங்களை வென்று சாதனை படைத்து தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தது.

இதில் ரிதன் பிரின்ஸி விக்டரி அகாடமி நிறுவனரும், தமிழ்நாடு சிலம்ப கமிட்டியின் மாநில பொதுச் செயலாளருமான அர்ஜூன், மாணவர்களை பாராட்டினார்.

அப்போது பயிற்சியாளர்கள் மணிகண்டன், சந்தோஷ், முகிலன், ரஞ்சித், சக்தி, அக்சையா, நிலேஸ் கார்த்திக், நலன், பரத், சக்தி அமிர்தவர்ஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்