பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆவத்திபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை கவுரி தலைமை தாங்கினார். பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மாணவ, மாணவிகள் சாலையில் செல்லும்போதும், பொது இடங்களில் செல்லும் போதும் நடந்து கொள்ளும் விதம் குறித்து பேசினார்.
மேலும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தால் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினார். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.