மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

மோகனூர் அருகே பள்ளி செல்லாததை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Update: 2022-12-07 18:45 GMT

10-ம் வகுப்பு மாணவன்

மோகனூர் அருகே வளையப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 47). இவர் ரெட்டையாம்பட்டியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஜனகராஜ் (14) என்ற மகனும் இருந்தனர். அதில் ஜனகராஜ் நாமக்கல் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் மாணவன் ஜனகராஜ் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இது குறித்து மாணவனின் தாயார் கேட்டபோது, படிப்பதற்கு விருப்பம் இல்லை என அவன் கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, வீட்டில் உள்ள ஒரு அறையில் ஜனகராஜ் தூங்க சென்றான். நேற்று அதிகாலை எழுந்த சரஸ்வதி, ஜனகராஜ் படுத்திருந்த அறையின் கதவை தட்டி உள்ளார்.

தற்கொலை

எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஜனகராஜ் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அதை பார்த்த சரஸ்வதி கதறி அழுதுள்ளார். சம்பவம் குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பூர்ணிமா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்