நாட்டறம்பள்ளி அரசு பள்ளி மாணவர் 2-ம் இடம் பிடித்து சாதனை
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் நாட்டறம்பள்ளி அரசு பள்ளி மாணவர் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாநில அளவிலான கலைத்திருவிழா கோவையில் நடந்தது.
இப்போட்டிகளில் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர் கார்த்திக் தனிநபர் கவின்கலை களிமண் சிற்பம் செய்தல் பிரிவில் விநாயகர் சிலை செய்து மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதையடுத்து மாணவர் கார்த்திக் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் லட்சுமணன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் சா.இளங்கோ, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சி.ரவிவர்மன், உதவி ேதலைமை ஆசிரியர்கள் வேல்முருகன், முருகேசன், ஆசிரியர்கள் பெருமாள், நடராஜன், மாதலிங்கம், இளநிலை உதவியாளர் தீபக்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.