கடலூர் அருகேதறிகெட்டு ஓடிய கார் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவர்ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கடலூர் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதி கல்லூரி மாணவர் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-12-27 18:45 GMT


ரெட்டிச்சாவடி,

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று சிதம்பரத்துக்கு ஒரு காரில் புறப்பட்டார். அந்த கார், கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் வந்த போது, திடீரென மஞ்சுநாதனின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த கார், சாலையில் தறிகெட்டு தாறுமாறாக ஓடியது.

அப்போது சாலையோரம் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த நாணமேடுவைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ரமணா(வயது 17) என்பவர் மீது அந்த கார் மோதியது. இதில் ரமணா தூக்கி வீசப்பட்டார். மேலும் கார் சாலையில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீது மோதி, சாலையோரமாக கவிழ்ந்தது.

தீவிர சிகிச்சை

உடன் அங்கிருந்தவர்கள் ஓடோடி வந்து, படுகாயமடைந்த ரமணாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய மஞ்சுநாதன், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து பற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் நேரில் வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் சீரமைத்தனர். விபத்து காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்