குளவி கொட்டி 3-ம் வகுப்பு மாணவன் படுகாயம்

குளவி கொட்டி 3-ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்தான்.

Update: 2023-03-16 18:45 GMT

கீழக்கரை, 

கீழக்கரை ரூபி கார்டன் அருகில் உள்ள பகுதியில் பனை மரத்தில் மலை குளவிகள் கூடுகட்டி உள்ளன. நேற்று முன்தினம் ஜாகிர் மகன் ஜமால்கான் (வயது 8) என்ற 3-ம் வகுப்பு மாணவன் அவ்வழியாக பள்ளிக்கு சென்றபோது திடீரென மலை குளவி துரத்தி துரத்தி கடித்தது. அதில் அவன் முகம், கை, கால்கள் வீங்கி மயங்கி விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் மாணவனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே குடியிருப்பு பகுதியில் உள்ள அந்த மலை குளவி கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்