குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கை
குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.
குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., பி.காம் (கணினி பயன்பாட்டியல்), பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், பி.சி.ஏ. ஆகிய 14 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் 2022- 2023-ம் கல்வி ஆண்டில் 625 இடங்களுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் ஜூலை மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை இணைய வழியாக செலுத்தலாம். மாணவ-மாணவிகள் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணை ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட இணையதளங்கள் வாயிலாகவும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் கல்லூரி அலுவலகத்தை அணுகலாம் என்று கல்லூரி முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.