நாகூரை அடுத்த தெத்தி சிவசக்தி நகரில் வசித்து வருபவர் மாதவன். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 14) நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது, அருகில் உள்ள குளத்தில் கால் கழுவுவதற்காக இறங்கி உள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிைய பரிசோதனை செய்த டாக்டர் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.