செஞ்சி
செஞ்சி அருகே உள்ள மேல் வெங்கமூர் என்ற ஊரை சேர்ந்தவர் மகள் மதுமிதா (வயது 14). பனமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது. உடனடியாக பெற்றோர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திாில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மதுமிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.