மாணவிகள் பேரவை தொடக்க விழா
பேட்டை ராணி அண்ணா அரசு கல்லூரியில் மாணவிகள் பேரவை தொடக்க விழா நடந்தது.
பேட்டை:
பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் மாணவியர் பேரவை தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) சாக்ரடீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முதல்வர் மைதிலி தலைமை தாங்கினார். கல்லூரி பேரவையின் உறுப்பினர்களாக அனைத்து துறைகளின் செயலர்களும், தலைவராக சசிப்பிரியா மூன்றாம் ஆண்டு இளம் அறிவியல் மாணவியும் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில் டாரதி பேரவை பொறுப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.