விஷம் குடித்து மாணவி தற்கொலை
பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா சித்தனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது48). விவசாயி. இவருடைய மகள் சவித்ராதேவி (17). இவர் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இவர் 3 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சவித்ராதேவி வயலுக்கு வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்தார். உடனே அவரை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் தொடர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.