விஷமாத்திரை தின்று மாணவர் தற்கொலை

சுசீந்திரம் அருகே கல்லூரிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மாணவர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-07 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே கல்லூரிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மாணவர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன்புதூரை அடுத்த தேரியான்விளையை சேர்ந்தவர் குமார். இவருடைய மூத்த மகன் முகேஷ் (வயது 19). நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக முகேஷ் கல்லூரிக்கு சரிவர செல்லவில்லை. இதனால் குமார், மகனிடம் கல்லூரிக்கு செல்லாதது ஏன்? கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லையென்றால் வேலைக்கு செல்லுமாறு கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மன வேதனை அடைந்த முகேஷ், தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை தின்று வீட்டின் அருகே உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துள்ளார். மேலும் விஷ மாத்திரை தின்ற தகவலை தன்னுடைய தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பதறிப்போன தாய், உறவினர்கள் உதவியுடன் முகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்து அவருடைய தந்தை குமார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்லூரிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்