பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் தற்கொலை
கண்ணமங்கலம் அருகே பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கணபதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மகன் பிரசாந்த் (வயது 17), பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.