கிணற்றில் மாணவர் பிணம் மீட்பு

கிணற்றில் இருந்து மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-01-16 19:49 GMT

காரியாபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் மகன் விக்னேஷ் பாண்டி (வயது 17). இவர் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி விருதுநகரில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் விக்னேஷ் பாண்டி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில் மேட்டுப்பட்டி பகுதியில் கிணற்று அருகே விக்னேஷ் பாண்டியின் இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவை கிடந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் மற்றும் காரியாபட்டி தீயணைப்பு படையினர் கிணற்றில் தேடிப்பார்த்தனர். அப்போது விக்னேஷ் பாண்டி கிணற்றில் பிணமாக கிடந்தார். இதையடுத்து தீயணைப்பு படையினர் விக்னேஷ் பாண்டியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். மல்லாங்கிணறு போலீசார், விக்னேஷ் பாண்டியின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்