தென்கீரனூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

தென்கீரனூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-06-18 15:10 GMT

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மணி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, துணைத்தலைவர் சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை, பாடப்புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள், காலணிகள், உணவுகள், மேல்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்வியாளர் செந்தில்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஜெயா மற்றும் ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்