மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
ராதாபுரத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ராதாபுரம்:
ராதாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 290 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை அரசு தொடக்கப்பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டார கல்வி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி நான்கு ரத வீதி மற்றும் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் வட்டார கல்வி உதவியாளர் ஜெயபிரகாஷ், தலைமை ஆசிரியர் ராஜகுமார், ஆசிரியர் எட்வின் செல்வகுமார், ஆசிரியைகள் ஜான்சிராணி, ஜலஜா, சுமித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.