சிவந்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கட்டாய கல்வி அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
சேரன்மாதேவி ஆசிரிய பயிற்றுனர் பாஸ்கரன், 15 மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தார். விண்ணப்பித்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். இதில் பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.