மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி மீது ஏறி தொழிலாளி மகன்களுடன் போராட்டம்

மழைநீரை அகற்றக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது தொழிலாளி, அவருடைய 2 மகன்களுடன் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்டடது.

Update: 2022-09-06 20:39 GMT

இளம்பிள்ளை:-

மழைநீரை அகற்றக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது தொழிலாளி, அவருடைய 2 மகன்களுடன் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்டடது.

மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது

மகுடஞ்சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இந்த நிலையில் மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.புதூர் ஊராட்சி பட்டிணாப்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாலாஜி (வயது 35), என்பவரது வீட்டிலும் மழை நீர் புகுந்தது.

இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த அவர், மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க ேகாரிக்கை விடுத்தார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தந்தை-மகன்கள் போராட்டம்

இதையடுத்து நேற்று அப்பகுதியில் உள்ள ேமல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது பாலாஜியும், அவருடைய அவரது மகன்கள் அருணாச்சலம், அண்ணாமலை ஆகியோர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, எர்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தந்தை-மகன்கள் கீழே இறங்கி வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்