வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, கையில் திருவோடு ஏந்தி போராட்டம்

பனப்பாக்கம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, கையில்திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-16 19:03 GMT

திருவோடு ஏந்தி போராட்டம்

பனப்பாக்கத்தை அடுத்த கல்பலாம்பட்டு கிராமத்தில் கடந்த 7-ந் தேதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தின் கடைசி நாளான நேற்று விவசாய சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, தேங்காய் உடைத்தும், கையில் திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், பசும்பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.75 வழங்க வேண்டும்.

கள் இறக்க அனுமதிக்க வேண்டும்

தென்னை, பனை ஆகியவற்றில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், உழவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும் என்ற 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல், இயற்கை விவசாயி பிரபாகரன், கோபி, பாலாஜி உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்