பட்டா வழங்கக்கோரி காத்திருக்கும் போராட்டம்

பட்டா வழங்கக்கோரி காத்திருக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2023-04-25 21:30 GMT

திருச்சி மாநகராட்சி 62-வது வார்டுக்கு உட்பட்ட பஞ்சப்பூர் கிராமத்தில் 5 தலை முறைகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு அந்த இடத்தை நத்தம் வகை மாற்றம் செய்து பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் பஞ்சப்பூர் பகுதி மக்கள் கிழக்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின் ஆகியோர் பேசினர். இந்த போராட்டத்தில் குருநாதன், கல்யாணி, இளங்கோவன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி மற்றும் உதவிபோலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்