தொழிலாளர் உதவி ஆணையருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் தொழிலாளர் உதவி ஆணையருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-02 19:22 GMT

நெய்வேலி, 

நெய்வேலி என்.எல்.சி.யில் பணிபுரியும் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் மற்றும்ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம், அதுவரையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில், நேற்று புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையருக்கு தபால் அட்டை மூலம் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தங்களது கோரிக்கைளை தபால் அட்டையில் குறிப்பிட்டு, நீங்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு நேரில் வந்து ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி எங்களுக்கு உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்