தென்னை சார்ந்த தொழில்களை உருவாக்கக்கோரி போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்னை சார்ந்த ெதாழில்களை உருவாக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்னை சார்ந்த ெதாழில்களை உருவாக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது.
கட்டுப்படியான விலை
தேங்காய்க்கு கட்டுப்படியான விலை அளிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை சார்ந்த தொழில்களை உருவாக்கவும், தென்னை மரம் ஏறும் கருவிகளை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாய சங்கம் சார்பில் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட செயலாளர் காளிதாஸ், மாவட்ட பொருளாளர் ராமராஜ், மாவட்ட துணைத் தலைவர் பெருமாள் ஆகியோர் பேசினர்.
போராட்டம்
தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். போராட்டத்தில் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் பீமராஜா, ஒன்றிய தலைவர் மூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ரமேஷ், சுசிலா, மாணிக்கம், வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் ராமர், செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயக்குமார், நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.