அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி போராட்டம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி போராட்டம்
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அரசுஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழுநேர மருத்துவமனையாக மாற்றக்கோரியும், பெண் டாக்டரை நிரந்தரமாக நியமிக்க கேட்டும் டி.ஒய்.எப்.ஐ. கொல்லங்கோடு வட்டாரக்குழு சார்பில் கண்ணனாகம் சந்திப்பில் மாலைநேர தர்ணா போராட்டம் நடந்தது. வட்டார தலைவர் ராசிக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் ரெதீஸ், கொல்லங்கோடு வட்டார செயலாளர் ரமேஷ், அடைக்காகுழி வட்டார செயலாளர் லெனின், முன்சிறை வட்டார செயலாளர் ரமேஷ் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். சி.பி.ஐ.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் நிறைவுரையாற்றினார்.