பட்டா இடம் வழங்கக்கோரி போராட்டம்
மதுரையில் பட்டா இடம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
உசிலம்பட்டி தாலுகா சொக்கத்தேவன்பட்டியில் உள்ள பட்டியலின மக்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூலம் கடந்த 2000-ம் ஆண்டு சுமார் 60 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டன. இதற்கான சர்வே எண்ணும், நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டும், தற்போது வரை பயனாளிகளுக்கு அந்த இடம் வழங்கப்படாமல் உள்ளது.
இந்தநிலையில், முன்னாள் முதல்- அமைச்சர் கொடுத்த பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து வழங்கிடக்கோரி மதுரை மாவட்ட ஆதித்தமிழர் விடுதலை கட்சி அமைப்பாளர் விடுதலை வீரன் தலைமையில், கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.