சி.ஐ.டி.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-25 13:25 GMT

திருப்பூர்

நலவாரிய பணபலன்களையும், பென்சன் முறையாக வழங்கிட வேண்டியும் சி.ஐ.டி.யு. சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில தலைவர் பி.முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் பணபலன்கள் கேட்டு விண்ணப்பித்த கேட்பு மனுக்களுக்கு விரைந்து பணபலன் வழங்கிட வேண்டும், அமைப்புசார நலவாரிய தொழிலாளர்களுக்கு கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்டவற்றுக்கு பணபலன் உயர்த்தி வழங்கிட வேண்டும், பென்சன் முறையாக மாத தொடக்கத்தில் வழங்கிடவும், பென்சன் 3 ஆயிரமாக உயர்த்திடவும், 2022-ல் நேரடியாக ஆயுள் சான்று கொடுத்த ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் உடனே வழங்கிடவும், கூடுதல் பணியாட்களை நியமித்து தொழிலாளியின் கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அனைத்து வாரிய தொழிலாளிக்கும் வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.ராஜன், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி.பாலன், மோட்டார் சங்க செயலாளர் அன்பு மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்