தாரமங்கலம்
தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் கருக்கல்வாடி. அழகுசமுத்திரம். கோணகப்பாடி ஆகிய ஊராட்சி பகுதியை சேர்ந்த கட்சியினர் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தமிழக அரசு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், மாவட்ட அமைப்பு தலைவர் சரவணகந்தன், மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து பா.ம.க.வினர் பைகளில் கொண்டு வந்த 6 ஆயிரம் கடிதங்களை இரும்பாலை தபால் நிலையத்தில் செலுத்தினர். இதில் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் சுரேஷ், இளைஞர் அணி துணை செயலாளர் பொன் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னதம்பி, குமார், ஒன்றிய தலைவர் அருள்மணி, வன்னியர் சங்க நிர்வாகிகள் ரத்தினம், நாகராஜ், ஜெகநாதன் மற்றும் ஊடக பேரவை நிர்வாகிகள் அழகுபதி, செந்தில், ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.