பா.ம.க.வினர் கடிதம் அனுப்பும் போராட்டம்

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்ககோரி தர்மபுரி அருகே வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ம.க.வினர் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-15 17:04 GMT

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு 2023-24-ம் கல்வி ஆண்டில் வழங்கும் வகையில் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே 31-ந் தேதிக்குள் நிறைவேற்றகோரி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஆகியோருக்கு பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் கெட்டுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் சுமார் 500 பேர் அங்குள்ள தபால் நிலையத்தில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் பசுமை தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன் முன்னிலையில் கடிதம் அனுப்பினர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய பொறுப்பாளர்கள் முனுசாமி, முத்து, செல்வம் மற்றும் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்