பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஊர்வலம்்; கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஊர்வலம்்; கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Update: 2023-04-03 20:49 GMT

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் நேற்று ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் இருந்து சங்க மாவட்ட செயலாளர் மோசப்பன் தலைமையில் பணியாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ேகாரிக்கை மனு கொடுத்தார்கள். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பயிர் கடன் தள்ளுபடியில் விதிமீறலை காரணம் காட்டி, பணி ஓய்வு நிதி பலன்களை நிறுத்தி வைக்கக்கூடாது. பயிர் கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழு கடன் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்கான தொகையை மாநில அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். சங்க தணிக்கையை கூட்டுறவு துறை அல்லது பட்டய தணிக்கை துறை மேற்கொள்ள வேண்டும். சங்கத்தில் பல்வேறு காரணங்களை கூறி தேவையற்ற பொருட்களை வாங்க வலியுறுத்தக்கூடாது. தொடக்க கூட்டுறவு சங்கங்களில் தொலை தூரங்கள் அல்லது பிற மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்பவர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களிலேயே பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்